tamilnadu

img

புதியக் கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு சென்னையில் மாணவர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜூன் 17- நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும், கல்வியை காவிமய மாக்கும், தனியார்மய மாக்கும் புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும், இந்தியை திணிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே திங்களன்று (ஜூன் 17) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இரண்டு அமைப்புகளின் மாநிலத் தலைவர்கள் த.கு.வெங்கடேஷ், மௌ.குண சேகர் ஆகியோர் தலைமை தாங்கினர். மாணவர் பெருமன்ற மாநிலச் செயலா ளர் சீ.தினேஷ் வரவேற்றார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் இரா.முத்தரசன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.  திமுக மாணவர் அணிச் செயலாளர் எழிலரசன், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திர நாத், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன், அகில இந்திய மாணவர் காங்கிரஸ் மாநிலத் தலை வர் என்.அஸ்வத்தாமன்,  திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மதிமுக மாணவர் அணியின் மாநிலச் செயலாளர் பால.சசிகுமார், விசிக முற்போக்கு மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.சிவக்குமார், சமூக நீதி மாணவர் இயக்க மாநிலச் செயலாளர் நூர்தீன், முஸ்லீம் மாணவர் பேரவை மாநிலத் தலைவர் மு.அன்சாரி, தமிழ்நாடு மாணவர் முன்னணி நிர்வாகி சே.இளையராஜா, இளைஞர் பெருமன்ற மாநிலச் செயலாளர் க.பாரதி, முன்னாள் இளைஞர் பெரு மன்ற மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.